சுடச்சுட

  

  தேசிய தட களம்: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திரஜித் வெற்றி

  Published on : 26th September 2012 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை, செப். 11: சென்னையில் நடைபெற்று வரும் 52-வது தேசிய சீனியர் ஓபன் தட கள சாம்பியன்ஷிப் போட்டியின் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓஎன்ஜிசி வீரர் இந்திரஜித் வெற்றி பெற்றார்.

  இதே போட்டியின் மகளிர் பிரிவில் ரயில்வே அணியின் எல்.சூர்யா வென்றார். ரயில்வேயின் மற்றொரு வீராங்கனை பிரீஜா ஸ்ரீதரன் இரண்டாவது இடத்தையும், எல்ஐசி வீராங்கனை மோனிகா ஆதர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

  சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கிய இப் போட்டியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். செப்டம்பர் 13 வரை இப்போட்டிகள் நடைபெறு

  கின்றன.

  போட்டியின் முதல் நாளான திங்கள்கிழமை மழையால் ஆட்டம் தாமதமாகவே நடைபெற்றது. இதில் ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திரஜித் முதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் கேதா ராம் இரண்டாவது இடத்தையும், ஓஎன்ஜிசி வீரர் சுரேஷ் குமார், 3-வது இடத்தையும் பிடித்தனர்.

  கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் ரயில்வேயின் பிமின் முதலிடம் பிடித்தார். குஜராத் வீரர் பினீஷ் ஜேக்கப், ஹரியாணாவின் பிரவீண் ஆகியோர் முறையே 2,3-வது இடத்தைப் பிடித்தனர்.

  மகளிர் நீளம் தாண்டுதலில் மகாராஷ்டிர வீராங்னை ஷ்ரத்தா குலே வெற்றி பெற்றார். எல்ஐசியின் டெல்பின் ராணி, ரயில்வே வீராங்கனை சூசன் கே. ஜாய் ஆகியோர் அடுத்த இடங்களைப் பிடித்தனர்.

  வட்டு எறிதலில் ரயில்வேயின் பிரமிளா முதலிடம் பிடித்தார். ராஜஸ்தானின் பிரவீண் குமாரி, ஓஎன்ஜிசி நவ்ஜீத் கெüர் தில்லான் ஆகியோர் முறையே 2,3-வது இடத்தைப் பிடித்தனர்.

  ஈட்டி எறிதல் போட்டியில் உத்தரப் பிரதேச வீராங்னை அன்னு ராணி வென்றார். ரயில்வேயின் சரஸ்வதி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை ஆர்த்தி மெüர்யா ஆகியோர் அடுத்த இடங்களில் வந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai