சுடச்சுட

  

  பாரத ரத்னா விருது பெற சச்சினுக்கு முழுத் தகுதி: வெங்கடேஷ் பிரசாத்

  Published on : 26th September 2012 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  ஓமலூர், செப்.11: பாரத ரத்னா விருது பெற சச்சினுக்கு முழுத் தகுதி உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

  ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே கிரிக்கெட் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் சேலம் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பி.கே.வெங்கடேஷ் பிரசாத் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.

  இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழக பெரியார் கலையரங்கில் கர்நாடக ரஞ்சி விளையாட்டு வீரர் பி.ஸ்ரீனிவாச மூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

  விழாவில் வெங்கடேஷ் பிரசாத் பேசியது:

  தமிழக வீரர்கள் பத்ரிநாத், பாலாஜி, தினேஷ் கார்த்திக் ஆகியோரிடம் சில தமிழ் வார்த்தைகளை கற்றுள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.

  எதிர்கால கிரிக்கெட் இளைஞர்களை நம்பித்தான் உள்ளது. குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மனம் தளராது தங்களது திறமைகளை மாநில அளவிலான போட்டிகளில் வெளிப்படுத்தினால் இந்திய அணியில் நிச்சயம் இடம் பெறலாம். இளைஞர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

  இலங்கை விளையாட்டு மைதானங்கள் சுழல்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் அங்கு நடைபெறவுள்ள 20-20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  யுவராஜ் சிங் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது, அஸ்வினின் பந்து வீச்சு, விராட் கோலியின் பேட்டிங் என பல்வேறு அம்சங்கள் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளன என்றார் வெங்கடேஷ் பிரசாத்.

  விழாவில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், உடல்கல்வி இயக்குநர் (பொறுப்பு) எஸ்.கதிரவன், கனரா வங்கி துணைப் பொது மேலாளர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் கே.அங்கமுத்து வரவேற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai