சுடச்சுட

  

  சென்னை, செப். 11: சென்னையில் நடைபெற்று வரும் முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.) அணி 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரயில்வே அணியை வென்றது.

  87-வது முருகப்பா கோப்பை தேசிய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான செவ்வாய்க்கிழமை இரு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

  ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐ.ஓ.சி. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 35,37 வது நிமிடங்களில் அந்த அணி வீரர்கள் கோல் அடுத்து முன்னிலை பெற்றனர். 44-வது நிமிடத்தில்தான் ரயில்வே அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அதன் பின்னர் ஐ.ஓ.சி. அணி மேலும் இரு கோல்களை அடுத்து 4-1 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.

  56, 64 நிமிடங்களில் ரயில்வே வீரர்கள் கோல் அடித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப முயன்றனர். அப்போது கோல் கணக்கு 4-3 என்று இருந்தது. 66-வது நிமிடத்தில் ஐ.ஓ.சி. அணி 5-வது கோலை எடுத்தது. தொடர்ந்து அந்த அணி வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர் முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.சி. வென்றது.

  முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சுங்கத்துறை அணி, ஐ.சி.எஃப். அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சுங்கத்துறை வீரர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கோல் அடித்தனர். இதனால் 6-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர். கடுமையாகப் போராடிய ஐ.சி.எஃப். வீரர்கள் 68,69-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் கோல் வித்தியாசத்தை குறைக்க முடிந்தது. இறுதியில் 6-2 என்ற கணக்கில் சுங்கத்துறை அணி வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai