சுடச்சுட

  
  spt2

  நியூயார்க், செப். 10: யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றினார்.

  நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை அவர் எதிர்கொண்டார். இதில் 6-2,2-6,7-5 என்ற செட் கணக்கில் செரீனா வென்று சாம்பியன் ஆனார்.இதன் மூலம் 4-வது முறையாக யு.எஸ். ஓபன் பட்டம் வென்றுள்ளார்.

  இந்த மாதம் 26-ம் தேதி தனது 31}வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள அவர், மிக அதிக வயதில் யு.எஸ். ஓபன் டென்னிஸில் வென்ற வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

  இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் தனது 31-வயதில் யு.எஸ். ஓபனில் பட்டம் வென்றார்.

  முன்னதாக இந்த ஆண்டில் விம்பிள்டன் பட்டத்தையும் செரீனா வென்றார்.

  ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் தலா 5 முறை, யு.எஸ். ஓபனில் 4 முறை, பிரெஞ்சு ஓபனில் ஒருமுறை என 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை செரீனா கைப்பற்றியுள்ளார்.

  இதுதவிர மகளிர் இரட்டையர் பிரிவில் 13 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுளார்.

  இத்தாலி ஜோடி வெற்றி: மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இத்தாலியின் சாரா இர்ரானி, ராபெர்டா வின்சி ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா லவாகோவா, லூசி ஹ்ராடெகா இணையை 6-4,6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் ஆனது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai