சுடச்சுட

  

  சென்னை, செப். 12: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்கு ஓ.என்.ஜி.சி., ராணுவ லெவன் அணிகள் முன்னேறியுள்ளன. 87-வது முருகப்பா கோப்பைக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  ஓ.என்.ஜி.சி. வெற்றி: போட்டியின் 7-வது நாளான புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி.பி.சி.எல். அணியை எதிர்கொண்டது ஓ.என்.ஜி.சி.

  ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஓ.என்.ஜி.சி.க்கு கோல் கிடைத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அந்த அணியின் மன்தீப் அந்தில் கோலடித்தார். 20-வது நிமிடத்தில் மன்தீப் 2-வது கோலை அடிக்க, முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது ஓ.என்.ஜி.சி.

  முதல் பாதி ஆட்டத்தைப் போலவே 2-வது பாதி ஆட்டத்திலும் முதல் நிமிடத்தில் (36-வது நிமிடம்) ஓ.என்.ஜி.சி.க்கு கோல் கிடைத்தது. இந்தக் கோலை திவாகர் ராம் அடித்தார். 38-வது நிமிடத்தில் பி.பி.சி.எல். அணிக்கு முதல் கிடைத்தது. இந்த கோலை பந்தாலிக் பெல்லாரி அடித்தார். 60-வது நிமிடத்தில் ககன்தீப்பும், 65-வது நிமிடத்தில் திவாகர் ராமும் ஓ.என்.ஜி.சி. அணிக்கு கோலடித்தனர். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பி.பி.சி.எல். வீரர் ஜர்னைல் சிங் கோலடித்தார். இறுதியில் ஓ.என்.ஜி.சி. 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

  "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஓ.என்.ஜி.சி. 4 லீக் ஆட்டங்களிலும் விளையாடி 2 வெற்றி, 2 டிராவுடன் மொத்தம் 8 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. வியாழக்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தைப் பொறுத்து பி.பி.சி.எல். அணியின் அரையிறுதி வாய்ப்பு அமையும்.

  அரையிறுதியில் ராணுவ அணி: மற்றொரு லீக் ஆட்டத்தில் ராணுவ லெவன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் வங்கி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராணுவ அணியும் அரையிறுதியை உறுதி செய்துவிட்டது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராணுவ 9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. "பி' பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான ஐ.ஓ.சி.யும், 3 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் அரையிறுதியை உறுதி செய்துவிட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai