சுடச்சுட

  

  சென்னை, செப்.12: சென்னையில் நடைபெற்று வரும் 52-வது தேசிய தட கள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதலில் சர்வீசஸ் வீரர் ஜிதின் தாமஸ் 2.22 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

  உயரம் தாண்டுதலில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான ஜார்க்கண்ட் வீரர் ஹரி சங்கர் 2.19 மீ. உயரம் தாண்டி 2-வது இடத்தையே பிடித்தார். இதே பிரிவில் ஓ.என்.ஜி.சி. வீரர் ஹர்ஷித் 2.16 மீ. உயரம் தாண்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

  ஓம் பிரகாஷ் ஏமாற்றம்: குண்டு எறிதல் பிரிவில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான ஓம் பிரகாஷ் சிங் 17.81 மீ. தூரம் எறிந்து 3-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் கண்டார். இந்தப் பிரிவில் ஓ.என்.ஜி.சி. வீரர் ஜஸ்தீப் சிங் 18.14 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார். ரயில்வே வீரர் சத்யேந்தர் குமார் 17.85 மீ. தூரம் எறிந்து 2-வது இடத்தைப் பிடித்தார்.

  400 மீ. தடையோட்டம்: 400 மீ. ஆடவர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் ரயில்வே வீரர் ஜோசப் ஆப்ரஹாம் 50 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

  ரயில்வேயின் மற்றொரு வீரரான சத்யேந்தர் சிங் (51.06 விநாடி) 2-வது இடமும், தமிழக வீரர் பினு அகுய்டோ (51.25) 3-வது இடமும் பிடித்தனர்.

  3000 மீ. ஸ்டீபிள் சேஸ்: ஆடவர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் போட்டியில் சர்வீசஸ் வீரர் ராமசந்திரன் 8 நிமிடம், 53 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.

  சர்வீசஸ் வீரர் வீரர் சஞ்ஜித் லுவாங் (8 நிமிடம், 54 விநாடி) 2-வது இடத்தையும், ஹரியாணா வீரர் சுனில் குமார் (8 நிமிடம், 57 விநாடிகள்) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai