சுடச்சுட

  

  தேர்வுக் குழுவினரின் கருணையால் விளையாட வேண்டாம்: சச்சினுக்கு இம்ரான் யோசனை

  Published on : 26th September 2012 11:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt3

  புது தில்லி, செப்.12: தேர்வுக்குழுவினரின் கருணையால் அணியில் இடம்பிடிக்காமல், புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வுபெற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

  கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் சச்சின், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 முறை ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதையடுத்து அவர் ஓய்வுபெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர்.

  இந்த நிலையில் இம்ரான் கான் மேலும் கூறியிருப்பது: சச்சின் மிகச்சிறந்த வீரர். அவருடைய இடத்தில் நான் இருந்தால் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வுபெற விரும்புகிறேன் என்று சொல்ல முடியும். தேர்வுக்குழுவினரின் கருணையால் அணியில் இடம்பிடிக்கக்கூடாது என்பதற்காகவே நான் சிறப்பாக விளையாடியபோதே ஓய்வுபெற்றேன்.

  இருப்பினும் சச்சினின் ஓய்வு குறித்து அவர் மட்டுமே முடிவு செய்ய முடியும். அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளோடு ஒன்றியவர். கடந்த 23 ஆண்டுகளாக அவரின் ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai