சுடச்சுட

  
  spt2

  கொழும்பு, செப்.12: இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய பலம் வாய்ந்த அணியைப் பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

  இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி இலங்கையில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி, இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு புதன்கிழமை வந்தது. அப்போது செய்தியாளர்களிடம் தோனி கூறியது:

  டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு திடீரென இருபது ஓவர் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதானதல்ல. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். அதனால் அவர்கள் இருபது ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

  வீரேந்திர சேவாக் போன்றவர்கள் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். இந்தியா மீண்டும் இருபது ஓவர் உலகக் கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமானால், யுவராஜ் சிங் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஒருநாள் போட்டியில் நாங்கள் உலகச் சாம்பியன். அதனால் இருபது ஓவர் உலகக் கோப்பையிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியமானது.

  பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அடங்கிய அணியைப் பெற்றுள்ளோம். முன்னணி பேட்ஸ்மேன்களில் பலர் பகுதி நேர பந்துவீச்சாளர்களும்கூட. இருபது ஓவர் போட்டியைப் பொறுத்தவரையில் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் முக்கியமானவர்கள். எங்களுடைய பகுதிநேர பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால் நாங்கள் மிகச்சிறந்த அணியைப் பெற்றுள்ளோம் என்றார்.

  புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள யுவராஜ் சிங், அதிரடியாக அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது பார்மை கருத்தில் கொண்டா அல்லது உணர்சிவசப்பட்டா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த தோனி, "அவர் அணியின் மிகப்பெரிய சொத்து. தேர்வுக் குழு விவகாரம் தொடர்பாக நான் எதுவும் பதில்கூற முடியாது.

  அதேநேரத்தில் சாம்பியன் வீரரும், மேட்ச் வின்னருமான அவர், மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பதில் மகிழ்ச்சியே. அவர் சம பலத்தை அணிக்குத் தந்திருக்கிறார். அதனால் 5-வது பெüலரை களமிறக்க வேண்டிய தேவையில்லை. எங்கள் அணியில் பெரிய அளவில் ஆல்ரவுண்டர்கள் இல்லாவிட்டாலும், பகுதி நேர பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள். விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு ஓவர் வீசினாலும், அது பெüலர்களின் சுமையைக் குறைப்பதாக அமையும்' என்றார்.

  இலங்கை மைதானங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மைதானங்களின் தன்மை நிறைய அளவில் மாற்றம் பெற்றுள்ளதாகக் கருதுகிறேன்.

  2005-ல் நாங்கள் இலங்கையில் விளையாடியபோது இங்குள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கள் இங்கு வந்து ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியபோது அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை.

  உதாரணத்துக்கு ஒரு மைதானத்தில் நிறைய போட்டிகள் நடத்தியிருந்தால் மட்டுமே, அதன் தன்மை மெதுவாக மாறி, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே நாங்கள் மைதானத்தின் தன்மையை அறிந்து, அதற்கேற்றவாறு திட்டமிடுவோம். எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.

  இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai