சுடச்சுட

  

  பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற கிரிஷாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

  Published on : 26th September 2012 11:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  பெங்களூர், செப்.12: பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு புதன்கிழமை பெங்களூர் திரும்பிய கிரிஷா ஹோசநகரா கெüடாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

  அப்போது அவர் பேசுகையில், "கர்நாடகத்துக்கும், இங்குள்ள மக்களுக்கும் எனது முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதேபோல் எனக்கு ஆதரவளித்த ஊடகங்கள், எனது குடும்பம் மற்றும் நாட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வேலைக்குப் போகும் எண்ணம் ஏதுமில்லை. விளையாட்டிலேயே தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகிறேன்.

  நான் என்னை ஒரு மாற்றுத்திறனாளியாக கருதவில்லை. மாறாக வித்தியாசமான நபராகவே நினைக்கிறேன். பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும்போது எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கையில்லை.

  ஆனால் எனது குடும்பம், சம்மேளனம், பயிற்சியாளரின் ஆதரவால் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்றார்.

  கர்நாடகத்தைச் சேர்ந்தவரான கிரிஷா, லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீ. உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  சச்சின் பாராட்டு: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்க்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக கிரிஷா கூறினார்.

  "சச்சின் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் நான் அவரின் தீவிர ரசிகன். அவருடைய ஆட்டத்தைத் தொடர்ந்து பார்க்கக்கூடியவன்.

  ஏராளமானோருக்கு சாதிக்கும் எண்ணத்தை நான் தூண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்று சிறப்பாக செயல்பட்டு நிறைய பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். விரைவில் அவரை சந்திக்க இருக்கிறேன்' என்றார் கிரிஷா.

  சாய்னாவைப் போன்று சச்சினும் ஏதாவது பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளாரா என்று கேட்டபோது, "அப்படி எதையும் அவரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை' என்றார்.

  சச்சினைப் போன்று சாய்னாவும் தனக்கு வாழ்த்துத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட கிரிஷா, "சுஷில் குமார் எனது ரோல் மாடல்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai