சுடச்சுட

  
  spt4

  புது தில்லி, செப்.13: இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவர் தேர்தலின்போது தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் சுரேஷ் கல்மாடி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  ஐஓஏ தலைவர் தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள நிலையில், இதுதொடர்பாக ராகுல் மேக்ரா என்ற வழக்குரைஞர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

  அதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, ஐ.ஓ.ஏ. தேர்தலின் போது தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறி, இது தொடர்பான விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

  உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கல்மாடி மீண்டும் ஐஓஏவின் தலைவராக முடியாது. தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் விதிமுறைப்படி ஒருவர் அதிகபட்சமாக 12 ஆண்டுகள் (3 முறை) மட்டுமே விளையாட்டு அமைப்புகளில் நிர்வாகியாக இருக்க முடியும். அதற்குமேல் தேர்தலில் போட்டியிட முடியாது.

  இதேபோல் 70 வயதைத் தாண்டியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. கல்மாடிக்கு 68 வயதுதான் ஆகிறது என்றாலும், அவர் 18 ஆண்டுகள் ஐஓஏவில் பதவி வகித்துவிட்டார். அதனால் அவர் போட்டியிட முடியாது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai