சுடச்சுட

  
  spt5

  துபை, செப்.13: இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் யுவராஜ் சிங்.

  புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், நியூஸிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு தரவரிசையில் 34-வது இடத்தில் இருந்தார். நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 34 ரன்கள் குவித்ததன் மூலம் 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

  இந்திய பேட்ஸ்மேன்களில் சுரேஷ் ரெய்னா மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் உள்ளார். இப்போது 3-வது இடத்தில் உள்ள அவருக்கு, இதுதான் அதிகபட்ச தரவரிசை. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூஸிலாந்து வீரர் பிரென்டன் மெக்கல்லம் முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 2-வது இடத்திலும் உள்ளனர்.

  பெüலர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்திலும், இங்கிலாந்தின் கிரீம் ஸ்வான் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன் போத்தா 3-வது இடத்திலும் உள்ளனர். இந்தியர்கள் யாரும் முதல் இருபது இடங்களுக்குள் இல்லை.

  அணித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த இந்திய அணி, நியூஸிலாந்திடம் தோற்றதால் இப்போது 7-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai