சுடச்சுட

  
  spt3

  பானாஜி, செப்.14: கோவா செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

  துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற 83-வது ஃபிடே கூட்டத்தின்போது குல்கர்னி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

  இதன்மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் கோவா வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

  ஒரு வீரர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதற்கு 3 கிராண்ட் மாஸ்டர் "நார்ம்ஸ்'களை பெற வேண்டும்.

  கடந்த ஜனவரியில் செக்.குடியரசில் நடைபெற்ற மரியேன்பாத் ஓபன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் மகளிர் செஸ், கடந்த நவம்பரில் ஹங்கேரியில் நடைபெற்ற கெய்ஸா சர்வதேச செஸ் ஆகியவற்றின் 3 "நார்ம்ஸ்' களைப் பெற்றார் குல்கர்னி.

  இது தொடர்பாக குல்கர்னி கூறுகையில், "கோவாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரானதில் மகிழ்ச்சியே.

  அனைத்து செஸ் வீரர்களுக்கும் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்ற கனவு இருக்கும். அதை இப்போது நான் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்ததாக சர்வதேச மாஸ்டர் மற்றும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டங்களைப் பெற முயற்சிப்பேன்'

  என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai