சுடச்சுட

  
  spt8

  புதுச்சேரி, செப். 14: நாட்டிலேயே முதல் முறையாக சர்வதேச நீர்ச்சறுக்கு விளையாட்டு போட்டி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  புதுச்சேரி சுற்றுலாத் துறை மற்றும் புதுச்சேரியில் இயங்கும் கலைலா நீர்ச்சறுக்கு பயிற்சிப் பள்ளி சார்பில் இப்போட்டி நடைபெறுகிறது. இதில், புதுவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஆஸ்திரேலியா, பிரேசில், இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 56 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

  20 வயதுக்குட்பட்டோர், அதற்கு மேற்பட்டவர்கள் என இரி பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 20 பேரும், 20 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 36 பேரும் பங்கேற்றுள்ளனர்.

  இதில், குறைந்த வயதுடைய, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆர்.கல்யாண் என்ற 12 வயது சிறுவனும், அதிக வயதுடைய ஆரோவில்லைச் சேர்ந்த ஆரோசன் என்ற 43 வயது வீரரும் பங்கேற்றுள்ளனர்.

  வெள்ளிக்கிழமை போட்டிகளை சுற்றுலாத் துறை செயலர் டபிள்யு.வி.ஆர்.மூர்த்தி தொடங்கி வைத்தார். முதல் நாளில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான தகுதிச் சுற்றும், 2-வது சுற்றுகளும் நடைபெற்றன.

  சனிக்கிழமை (செப்டம்பர் 15) 20 வயதுக்குட்பட்டோருக்கான தகுதிச்சுற்று, 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றுகளும், 20 வயதுக்கு மேற்பட்டோருக்கான 3-வது சுற்றும் நடைபெறுகின்றன.

  3-வது நாளான ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 16) இரு பிரிவினருக்குமான அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. முதல் பரிசாக, பதக்கம் மற்றும் கோப்பையுடன் நீர்ச்சறுக்குப் பலகை வழங்கப்படும்.

  2-வது பரிசாக பதக்கம், கோப்பையோடு ரூ.10 ஆயிரத்துக்கான பரிசுக்கூப்பன்கள் வழங்கப்படும். இப்போட்டியை பொதுமக்கள் திரளானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai