சுடச்சுட

  

  சென்னை, செப்.14: டெக்கான் அணி விவகாரம் தொடர்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்பட

  வுள்ளது.

  டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வைத்திருக்கும் டெக்கான் ஹோல்டிங் கிரானிக்கிள் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் அந்த அணியை விற்க முடிவு செய்துள்ளது.

  இதற்காக சென்னையில் கடந்த வியாழக்கிழமை ஏலம் நடைபெற்றது. அப்போது பி.வி.பி.வெஞ்சர்ஸ் குழுமம் நிர்ணயித்த ரூ.900 கோடி தொகை போதாது என்று கூறி அதை நிரா

  கரித்தது டெக்கான் குழுமம்.

  இதனால் சென்னையில் சனிக்கிழமை நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தின்போது டெக்கான் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளது.

  நிதி விவகாரம் தொடர்பான பிரச்னைகளை சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் தீர்க்குமாறு டெக்கான் குழுமத்துக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளது பிசிசிஐ. ஒருவேளை அந்தப் பிரச்னையில் தீர்வு காணப்படாவிட்டால் டெக்கான் அணி ஐபிஎல் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

  டெக்கான் அணியை நீக்குவது அல்லது அணியை பி.வி.பி.குழுமத்துக்கு கொடுப்பது அல்லது புதிய டெண்டர் கோருவதைத் தவிர பிசிசிஐக்கு வேறு வழியில்லை. இல்லாவிட்டால் அடுத்த ஐபிஎல் போட்டி 8 அணிகளோடு நடத்தப்படலாம். ஆனால் 8 அணிகளோடு போட்டி நடத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai