சுடச்சுட

    

    டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் பதவியில் இருந்து சேவாக் விலகல்

    Published on : 26th September 2012 11:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt6

    புது தில்லி, செப்.14: சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் போட்டியில் விளையாடவுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக இலங்கை வீரர் மஹேல ஜெயவர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 5 ஐபிஎல் போட்டிகளில் 4-ல் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த வீரேந்திர சேவாக், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் அப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி அணியின் பயிற்சியாளர் டி.ஏ.சேகர் கூறியிருப்பது: தென் ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் போட்டிக்கு ஜெயவர்த்தனா கேப்டனாக இருப்பார்.

    சில மாதங்களுக்கு முன்பு எங்களிடம் பேசிய சேவாக், பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதனால் ஜெயவர்த்தனாவிடம் கேப்டன் பொறுப்பை அளிக்குமாறும் தெரிவித்தார் என்றார்.

    பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியிலிருந்து இரண்டாவது முறையாக விலகியுள்ளார் சேவாக். முன்னதாக 2010-ல் இதேபோன்று கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக்.

    அதைத்தொடர்ந்து கெüதம் கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இதன்பிறகு கம்பீர், கொல்கத்தா அணிக்கு மாறியதால் சேவாக் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai