சுடச்சுட

    
    spt2

    சண்டீகர், செப்.14: டேவிஸ் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி வெற்றி கண்டார். இதன்மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    2-வது ஆட்டத்தில் இந்தியாவின் விஷ்ணுவர்தன் முன்னிலையில் இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானியா பிளே ஆஃப் முதல் சுற்று சண்டீகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    மழை காரணமாக போட்டி 11.30 மணிக்குப் பிறகே தொடங்கியது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியும், நியூஸிலாந்தின் டேனியல் கிங் டர்னரும் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் முதல் இரு செட்களை 3-6, 0-6 என்ற கணக்கில் இழந்தார் யூகி பாம்ப்ரி. இதனால் அவர் தோல்வியடைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பின்னடைவில் இருந்து மீண்ட யூகி பாம்ப்ரி, அடுத்த 3 செட்களையும் 6-2, 6-4, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.

    இந்த ஆட்டம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது.

    பாதியில் நிறுத்தம்: இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் விஷ்ணுவர்தனும், நியூஸிலாந்தின் ஜோஸ் ஸ்தாத்தமும் மோதினர். இந்த ஆட்டத்தில் 3 செட்கள் முடிவில் விஷ்ணுவர்தன் 6-2, 6-7, 6-4 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்

    பட்டது.

    இந்த ஆட்டம் சனிக்கிழமை தொடர்ந்து நடைபெறுகிறது. சனிக்கிழமை 4-வது செட்டோடு ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டால், இரட்டையர் பிரிவு போட்டியில் விஷ்ணுவர்தன் களமிறங்குவார்.

    ஒருவேளை 5-வது செட்டுக்கு சென்றால், இரட்டையர் பிரிவு போட்டியில் திவிஜ் சரணுடன், சனம் சிங் களமிறங்குவார்.

    சனிக்கிழமை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய ஜோடி, நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ்-ஆர்டென் சிடாக் ஜோடியை சந்திக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai