சுடச்சுட

  
  spt9

  கன்னியாகுமரி, செப். 14:÷மாநில அளவிலான 54-வது கேரம் போட்டி கன்னியாகுமரி எ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  போட்டிகளை தமிழ்நாடு கேரம் சங்கம், குமரி மாவட்ட கேரம் சங்கம், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி மற்றும் நாகர்கோவில் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

  தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகத்தின் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 180 வீரர்கள், 140 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

  தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், தமிழக கேரம் சங்கத் தலைவருமான கிறிஸ்துதாஸ் காந்தி போட்டியைத் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது:

  24 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கேரம் போட்டி இலங்கைத் தலைநகர் கொழும்பில் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  இதில் இந்தியா சார்பில் 8 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து உலகின் 4-ம் நிலை வீராங்கனை எஸ்.இளவழகி, இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை எம்.பரிமளாதேவி, இந்தியாவின் 4-ம் நிலை வீரர் சி.பாரதிதாசன் ஆகிய

  மூவரும் பங்கேற்கின்றனர்.

  மனதைப் ஒருநிலைப்படுத்தும் விளையாட்டுகளில் ஒன்றான கேரம் விளையாட்டில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்.

  நன்றாகப் படித்து, கேரம் விளையாட்டிலும் சிறந்து விளங்கினால் அவர்கள் இலவசமாக உயர்கல்வி கற்கவும், நல்ல வேலையிலும் அமரும் வாய்ப்பும் இப்போது பிரகாசமாக உள்ளது என்றார் அவர்.

  தொடக்க விழா நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி தாளாளர் டி.மரியவிக்டர், முதல்வர் ஆர்.சுரேஷ் பிரமில்குமார், டீன் செல்லகுமார் ரோஸ், மாநில கேரம் சங்க பொதுச் செயலர் விஜயராஜ், இயக்குநர் சுரேஷ் குமார், கன்னியாகுமரி மாவட்ட கேரம் சங்க தலைவர் கிளிட்டஸ் ராஜ், துணைத் தலைவர் சங்கரநாராயணன், செயலர் வளர்அகிலன் மற்றும் டாக்டர் சிவகுமார், ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai