சுடச்சுட

  
  spt5

  குவாஹாட்டி, செப்.14: லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று மத்திய வட கிழக்கு பிராந்தியத் துறை பவன் சிங் கடோவார் (படம்) அறிவித்துள்ளார்.

  இதேபோல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் பவன் சிங் தெரிவித்துள்ளார்.

  இதுபோன்ற சிறப்புப் பரிசுகள் விளையாட்டு வீரர்களின் கடுமையான உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் அங்கீகாரம் அளிப்பதோடு, ஊக்குவிப்பதாகவும் அமையும் என்று நம்புகிறோம் என்று பவன் சிங் கூறியுள்ளார்.

  சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்கள் பவன் சிங், மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது வட கிழக்கு பிராந்திய அமைச்சகத்தின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு செய்யும் அவர், மாநில ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் நடைபெறும் விளையாட்டு தொடர்பான கருத்தரங்கிலும் பங்கேற்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வட கிழக்கு மாநிலத்தினரை பவன் சிங் பாராட்டவுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai