சுடச்சுட

  
  spt3

  கொழும்பு, செப்.15: ஐசிசியின் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வீரர் விராட் கோலி தட்டிச் சென்றார்.

  கடந்த ஆண்டில் மட்டும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 8 சதம், 6 அரைசதம் உள்பட 1,733 ரன்கள் குவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 183 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

  சங்ககாராவுக்கு 3 விருதுகள்: இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாராவுக்கு ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது, சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது, மக்கள் விருது என 3 விருதுகள் கிடைத்துள்ளன.

  இருபது ஓவர் போட்டியின் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை தென் ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி தட்டிச் சென்றார். உத்வேகமிக்க கிரிக்கெட் வீரருக்கான விருது நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரிக்கு கிடைத்துள்ளது. வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் சுனில் நரேன் தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இலங்கைத் தலைநகர் கொழும்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai