சுடச்சுட

    
    spt5

    சங்ஜௌ, செப்.15: சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி கண்டார்.

    அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சிந்து 10-21, 21-14, 19-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜியாங் யாஞ்ஜியோவிடம் தோல்வி கண்டார்.

    சீனாவின் சங்ஜௌவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தின் முதல் செட்டை வெறும் 14 நிமிடங்களில் 21-10 என்ற கணக்கில் சீன வீராங்கனை வென்றார். இந்த செட்டில் ஜியாங் தொடர்ந்து 7 புள்ளிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் அபாரமாக ஆடிய சிந்து, ஒரு கட்டத்தில் 6-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். மிகுந்த நம்பிக்கையோடு விளையாடிய சிந்து, நெட்டின் அருகிலேயே பந்தைத் தட்டிவிட்டு 21-14 என்ற கணக்கில் 2-வது செட்டைக் கைப்பற்றினார். இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் கடுமையாகப் போராடினாலும், சிந்துவின் சில தவறுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஜியாங், 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.

    இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீராங்கனையான சிந்து, தனது காலிறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூயை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai