சுடச்சுட

  
  spt2

  சண்டீகர், செப்.15: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் 2 ஒற்றையர் மற்றும் ஒரு இரட்டையர் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியுள் ளது.

  இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானியா பிளே ஆஃப் முதல் சுற்று சண்டீகரில் நடைபெற்று வருகிறது.

  போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை இந்தியாவின் விஷ்ணுவர்தன்-நியூஸிலாந்தின் ஜோஸ் ஸ்தாத்தம் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

  இதனால் அந்த ஆட்டம் போட்டியின் 2-வது நாளான சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. இதில் விஷ்ணுவர்தன் 6-2, 6-7, 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி கண்டார்.

  இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் விஷ்ணுவர்தன்-திவிஜ் சரண் ஜோடி 7-6, 4-6, 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ்-டேனியல் கிங் ஜோடியை வீழ்த்தியது.

  இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களில் இந்தியா தோற்றாலும் எந்த பாதிப்பும் கிடையாது.

  இந்தப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியதன் மூலம் டேவிஸ் கோப்பை போட்டியின் அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது இந்தியா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai