சுடச்சுட

    

    முருகப்பா கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ஏர் இந்தியா-ஐ.ஓ.சி.

    Published on : 26th September 2012 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, செப்.15: சென்னையில் நடைபெற்று வரும் முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றில் ஏர் இந்தியா-ஐ.ஓ.சி. அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.

    சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஏர் இந்தியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஓ.என்.ஜி.சி. அணியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஐ.ஓ.சி. அணி 4-3 என்ற கோல் கணக்கில் பிபிசிஎல் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai