சுடச்சுட

  

  கொழும்பு, செப்.16: தெற்காசிய கால்பந்து சம்மேளன (எஸ்.ஏ.எஃப்.எஃப்.) மகளிர் கால்பந்து போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. முன்னதாக ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே கோலடித்து நேபாள அணி முன்னிலை பெற்றது.

  ஆனால் இந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 8-வது நிமிடத்தில் இந்தியாவின் சுப்ரியா ரெüத் கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை (1-1) எட்டியது. முதல் பாதி ஆட்டம் வரை சமநிலையே நீடித்தது.

  பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் பீம் பீம் தேவி கோலடிக்க இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து 87-வது நிமிடத்தில் இந்தியாவின் கமலா தேவி கோலடித்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai