சுடச்சுட

  
  spt4

  சென்னை, செப்.16: செஸ் போட்டியிலிருந்து ஓய்வுபெறும் திட்டமில்லை என்று உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

  2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக செஸ் போட்டியில் பட்டம் வென்று சாம்பியன்ஷிப்பை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

  5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான ஆனந்த், இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பது: ஓய்வுபெறும் திட்டம் ஏதுமில்லை. செஸ் போட்டியிலிருந்து எவ்வாறு ஒருவர் வெளியேற முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.

  நான் சந்தித்த போட்டியாளர்களில் இஸ்ரேலின் போரீஸ் கெல்பான்டுதான் கடினமான போட்டியாளர். அவர் மிகச்சிறந்த வீரர். உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கு என்னைப் போன்று கெல்பான்டும் தகுதியானவர் என்றார்.

  கடந்த மே மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் போரீஸ் கெல்பான்டை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்.

  ஃபிடே தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருப்பவர்களில் அதிக வயதுடையவர் உக்ரைனின் வேஸிலி இவான்சுக். அவருக்கு வயது 43.

  அவருக்கு அடுத்தபடியாக அதிக வயதுடையவர் ஆனந்த். இவான்சுக்கைவிட ஆனந்த் 8 மாதங்கள் மட்டுமே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai