சுடச்சுட

    

    டி-20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

    Published on : 26th September 2012 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொழும்பு, செப்.16: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் இலங்கைத் தலைநகர் கொழும்பில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

    இலங்கைக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் வெற்றிபெற்ற உற்சாகத்தில் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வலது மணிக்கட்டில் காயமடைந்த கம்பீர், இந்த ஆட்டத்தில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. கம்பீர் விளையாடாத பட்சத்தில் சேவாக்கும், கோலியும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்குவார்கள். சேவாக், பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக விளையாடக்கூடியவர். இதேபோல் யுவராஜ் சிங், தோனி, ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்தியா நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

    பந்துவீச்சில் இர்ஃபான் பதான், இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு வலு சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்.பாலாஜி, ஹர்பஜன் சிங் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் முகமது ஹபீஸ், இம்ரான் நசிர், அப்ரிதி, ஜம்ஷெத், உமர் அக்மல், கம்ரான் அக்மல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சயீத் அஜ்மல், உமர் குல், முகமது ஹபீஸ் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai