சுடச்சுட

  
  spt2

  சண்டீகர், செப்.16: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரு ஒற்றையர் பிரிவு ஆட்டகளிலும் இந்தியா வெற்றி கண்டது.

  இதன்மூலம் இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 5-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது.

  இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய ஓசியானியா பிளே ஆஃப் முதல் சுற்று சண்டீகரில் 3 நாள்கள் நடைபெற்றது.

  போட்டியின் முதல் இரண்டு நாள்கள் நடைபெற்ற இரு ஒற்றையர் ஆட்டங்கள், ஓர் இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றில் இந்தியா வெற்றி பெற்றது.

  கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இரு ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியும், நியூஸிலாந்தின் ஜோஸ் ஸ்தாத்தமும் மோதினர்.

  கடும் வெயிலுக்கு மத்தியில் 2 மணி நேரம், 41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி, அடுத்த இரு செட்களையும் 7-5, 7-6 (5) என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.

  மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சனம் சிங், நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடேக்கை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சனம் சிங் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி கண்டார்.

  இந்தியா 5-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியிருப்பதன் மூலம் அடுத்த சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் எதிரணியை "ஒயிட் வாஷ்' ஆக்கியுள்ளது இந்தியா.

  2005-ல் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை "ஒயிட் வாஷ்' ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai