சுடச்சுட

    

    டை பிரேக்கர் சுற்றில் குழப்பம்: ஏர் இந்தியா-ஐ.ஓ.சி. கூட்டாக சாம்பியன்

    Published on : 26th September 2012 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt6

    சென்னை, செப்.16: சென்னையில் நடைபெற்ற முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஏர் இந்தியா-ஐ.ஓ.சி. அணிகள் சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்து கொண்டன.

    இறுதி ஆட்டத்தின் "டை பிரேக்கர்' சுற்றில் ஐ.ஓ.சி. அணி கோலடித்தது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதையடுத்து இரு அணிகளுக்கும் சாம்பியன்ஷிப் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிப்பதற்காக இரு அணிகளும் "டை பிரேக்கர்' சுற்றில் விளையாடின. பெனால்டி ஷூட் அவுட்டில் 8 விநாடிக்குள் பந்தை அடிக்க வேண்டும். ஆனால் ஐஓசி அணி 2-வது பெனால்டி ஷூட் அவுட்டில் 8 விநாடிக்குப் பிறகே பந்தை கோல் கம்பத்துக்குள் அடித்துள்ளது. அப்போது ஒரு நடுவர், அதை அனுமதிக்காத நிலையில், மற்றொரு நடுவர் அதை கோலாக அறிவித்தார்.

    இதனால் ஏர் இந்தியாவின் பயிற்சியாளரான தன்ராஜ் பிள்ளை களத்தில் குதித்து பிரச்னையை கிளப்பினார். இதையடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பின்னர் இரு பெனால்டி ஷூட்அவுட்கள் முடிந்த நிலையில், தங்களின் கோல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடைசி பெனால்டி ஷூட் அவுட்டை அடிக்க ஐ.ஓ.சி. மறுத்துவிட்டது. இதையடுத்து இரு அணிகளும் கூட்டாக வென்றதாக அறிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai