சுடச்சுட

  
  spt3

  சண்டீகர், செப்.16: மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோருக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், 2014 ஜூன் வரை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்துள்ளது.

  ஏஐடிஏவின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏஐடிஏ பொதுச் செயலர் பரத் ஓஸா கூறுகையில், "எந்த வீரருக்கும் தடை விதிக்க ஏஐடிஏ விரும்பவில்லை. பூபதியும், போபண்ணாவும் நாட்டுக்காக விளையாட விரும்பினாலும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என்பதை அவர்களுக்கு தெரிவித்துவிட்டோம். தவறு செய்யும் வீரர்கள் இவ்வளவு காலம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை எதுவும் கிடையாது. இப்போது அதற்கான விதிமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இரண்டு அல்லது 3 மாதங்களில் அது நடைமுறைக்கு வரும். அதேநேரத்தில் வீரர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சில விதிமுறைகள் ஏற்கனெவே உள்ளது' என்றார்.

  டேவிஸ் கோப்பையில் விளையாடாமல், கிளப் போட்டிகளுக்கு பயஸ் முன்னுரிமை கொடுத்து வருவது தொடர்பாக கேட்டபோது, "ஏற்கெனவே அவர் காயப்பட்டுள்ளார். உணர்வுபூர்வமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அவர் ஊடகங்களின் பார்வையில் படவிரும்பவில்லை.

  ஒரு வீரர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக இருந்தால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க முடியும். கிளப் போட்டியில் விளையாடுவது தொடர்பாக பயஸ் வேண்டுகோள் விடுத்தார். அதனாலேயே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றார்.

  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸýடன் இணைந்து விளையாட மறுத்ததன் எதிரொலியாக டேவிஸ் கோப்பை போட்டியில் பூபதியும், போபண்ணாவும் சேர்க்கப்படவில்லை.

  இந்த நிலையில் 2014 ஜூன் வரை அவர்கள் இருவரையும் அணியில் சேர்ப்பதில்லை என்று டென்னிஸ் சங்கம் முடிவெடுத்துள்ளதால் இனி இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை மகேஷ் பூபதி இழந்துவிட்டார்.

  மகேஷ் பூபதி இப்போது 38 வயதை எட்டிவிட்டதால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நிச்சயம் அணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார். இளம் வீரர்களுக்கே டென்னிஸ் சங்கம் வாய்ப்பு கொடுக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai