சுடச்சுட

  

  பொறியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: இறுதியில் நெல்லை, சிவகாசி அணிகள்

  Published on : 26th September 2012 11:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி, செப். 17: திருநெல்வேலியில் நடைபெறும் மண்டல பொறியியல் கல்லூரிகள் இடையிலான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட திருநெல்வேலி, சிவகாசி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மண்டல பொறியியல் கல்லூரிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் திருநெல்வேலி மண்டல மைய உடற்கல்வித் துறை சார்பில் கடந்த சனிக்கிழமை முதல் நடத்தப்பட்டு வருகிறது.

  திங்கள்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் ஆடிய திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி அணி 105 ரன்கள் எடுத்தது. அதை எதிர்த்து விளையாடிய அரசு பொறியியல் கல்லூரி அணி 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பூபதி ராஜபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

  2-வது அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி அணி 114 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஐன்ஸ்டீன் கல்லூரி அணி 62 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டார்.

  அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணியும், சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி அணியும் செவ்வாய்க்கிழமை (செப். 18) நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai