சுடச்சுட

  

  இந்திய டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் பீட்டர்சனுக்கு இடமில்லை

  Published on : 26th September 2012 11:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  18spt4

  லண்டன், செப்.18: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.

   ஏற்கெனவே இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இடம் கிடைக்காத நிலையில், தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, இங்கிலாந்து வீரர்கள் குறித்து தரக்குறைவான எஸ்.எம்.எஸ்.களை தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அனுப்பியதாக பீட்டர்சன் சிக்கினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

   முன்னதாக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதோடு, தனது செயலுக்காக (எஸ்.எம்.எஸ். அனுப்பியது) மன்னிப்பும் கோரினார் பீட்டர்சன்.

   ஆனாலும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தாம் இடம்பெறுவோம் என்று அவர் நினைத்திருந்த நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கேப்டனாக இருந்த ஆன்ட்ரூ ஸ்டிராஸ் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், பீட்டர்சனும் இடம்பெறாததால் இளம் வீரர்களுடன் இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி நவம்பர் 15-ம் தேதி ஆமதாபாதில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த 3 போட்டிகளும் முறையே மும்பை, கொல்கத்தா, நாகபுரி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

   இங்கிலாந்து அணி விவரம்: அலாஸ்டர் குக் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், இயான் பெல், டிம் பிரெஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், நிக் காம்ப்டன், ஸ்டீவன் ஃபின், கிரஹாம் ஆனியன்ஸ், இயோன் மோர்கன், மான்டி பனேசர், சமித் படேல், மட் பிரையர், ஜோ ரூட், கிரீம் ஸ்வான், ஜொனாதன் டிராட்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai