சுடச்சுட

  

  சென்னை, செப்.18: சென்னை மாவட்ட கபடி அணிக்கான தேர்வுப் போட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

   24-வது மாநில சப்-ஜூனியர் கபடி போட்டி ராஜபாளையத்தில் வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

   இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள சென்னை மாவட்ட அணி, இந்த தேர்வுப் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்படும். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் காலை 8 மணி நடைபெறவுள்ளது.

   இதில் பங்கேற்பவர்கள் 16 வயதுக்கு மிகாமலும், உடல் எடை 50 கிலோவுக்கு அதிகம் இல்லாமலும் இருக்கவேண்டும் என்று சென்னை மாவட்ட கபடி சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai