சுடச்சுட

  

  டென்னிஸ் சங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு இந்திய டென்னிஸூக்கு தீங்கு விளைவிக்கும்: மகேஷ் பூபதி சாடல்

  Published on : 26th September 2012 11:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  18spt5

  மும்பை, செப்.18: இந்திய டென்னிஸ் சங்கம் பிரித்தாளும் சூழ்ச்சியோடு செயல்படுகிறது. அவர்களின் சர்வாதிகாரப் போக்கு இந்திய டென்னிஸின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று மகேஷ் பூபதி குற்றம்சாட்டியுள்ளார்.

   லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸýடன் இணைந்து விளையாட மறுத்ததால், பூபதியையும், போபண்ணாவையும் 2014 ஜூன் வரை இந்திய அணிக்கு தேர்வு செய்யமாட்டோம் என்று இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அறிவித்துள்ள நிலையில், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த பூபதி மேலும் கூறியிருப்பது:

   ஏஐடிஏவின் தலைவர் அனில் கண்ணா மோசமான அரசியல் நடத்தி வீரர்களிடையே மோதலை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனக்கும், பயஸýக்கும் இடையில் மோதலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

   இரண்டு ஆண்டு தடையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இருப்பினும் ஏஐடிஏவின் தடை விவகாரம் தொடர்பாக சட்டத்தை நாடுவோம். சட்ட ரீதியாக எதிர்கொள்வது தொடர்பாக வழக்குரைஞர்கள் ஆலோசித்து வருகின்றனர். அது தொடர்பாக மேலும் எதையும் தெரிவிக்க முடியாது.

   அனில் கண்ணா பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்கிறார். லண்டன் ஒலிம்பிக்கின்போது பயûஸ வைத்து என் மீது பலமுறை தாக்குதல் தொடுத்தார். துரதிருஷ்டவசமாக ஊடகங்களும், பயஸ்-பூபதி இடையே மோதல் என்று செய்தி வெளியிட்டன. ஆனால் அதன் பின்னணியில் இருந்த உண்மைகள் குறித்து கேள்வியெழுப்பவில்லை.

   என்னைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஏஐடிஏ எனக்குத் தடை செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நான் டென்னிஸில் சாதிக்க அவர்கள் ஒருபோதும் எனக்கு உதவியதில்லை. அவர்கள் என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று கருதுகிறார்கள். அதனாலேயே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எனக்கு பாடம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் இத்தகையப் போக்கு எங்களைப் போன்ற வீரர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்கால டென்னிûஸயே அழித்துவிடும்.

   எப்போதுமே இந்தியாவுக்காக விளையாடுவதை விரும்புபவன் நான். நியூஸிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட நான் தயாராக இருந்தபோதும், ஏஐடிஏ என்னை விளையாட அழைக்கவில்லை. எனக்கு தடை விதித்த விவரத்தைக்கூட ஏஐடிஏ தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் அனுப்பிய இ-மெயில் மூலமே அதை தெரிந்துகொண்டேன். இந்தியாவுக்காக கடைசியாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடினேன். லண்டன் ஒலிம்பிக்கில் நானும், போபண்ணாவும் தோற்றபோது, ஏராளமானோர் அதைக் கொண்டாடியுள்ளனர். அடுத்த ஆண்டு விளையாடுவதே இந்தியாவுக்காக நான் விளையாடும் கடைசிப் போட்டியாக இருக்கும்.

   டென்னிஸ் சங்க விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அல்லது மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட வேண்டும். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு யாரிடம் புகார் செய்வது என்றே தெரியவில்லை.

   டென்னிஸ் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. கடவுளின் கிருபையோடு டென்னிஸýக்கு என்னால் ஏதாவது செய்ய முடியும். நாடு முழுவதும் டென்னிஸ் போட்டி நடத்தி வருகிறேன். டென்னிஸ் மைதானங்களை அமைத்து வருகிறேன். திறமை வாய்ந்த வீரர்களுக்காக

   நிதி திரட்டி வருகிறேன். டென்னிஸ் அகாதெமிகளை திறந்து வருகிறேன். அது மக்களிடையே பேசப்பட்டது. அதனால் டென்னிஸ் சங்கத்தின் உதவியில்லாமல் நான் எதையும் செய்யக்கூடாது என்பதற்காக விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்தார்கள் என்றார்.

   ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு நடந்த மோதல் குறித்துப் பேசிய அவர், "எனக்கும், பயஸýக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை போக்க என்னிடமோ அல்லது பயஸிடமோ யாரும் பேசவில்லை. பிரெஞ்சு ஓபன் தொடங்கிய இரண்டு நாள்களுக்குப் பிறகு நானும், சானியாவும் ஒலிம்பிக் கலப்பு இரட்டையரில் பங்கேற்க முடியாது. பயஸýம், சானியாவும் பங்கேற்பார்கள் என்று டென்னிஸ் சங்கம் தெரிவித்தது' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai