சுடச்சுட

  
  18spt2

  பகுதிநேர பந்துவீச்சாளர்கள் ஜொலிக்காத பட்சத்தில், 5 பெüலர்களுடன் களமிறங்குவோம் என்று இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.

   இந்திய அணியின் பெüலிங் கவலையளிக்கும் நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:

   தொடக்க ஆட்டங்களில் 7 பேட்ஸ்மேன்களுடன் விளையாடுவோம். பகுதிநேர பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக பந்துவீசாத பட்சத்தில், அதற்கடுத்த ஆட்டங்களில் 6 பேட்ஸ்மேன்கள், 5 பெüலர்களுடன் களமிறங்குவோம். எங்களின் பந்துவீச்சு கவலையளிக்கும் வகையில் உள்ளது. பேட்டிங்கைவிட பெüலிங் சற்று பலவீனமாகவே உள்ளது. ஆனாலும் அனுபவமிக்க பந்துவீச்சாளர்களைப் பெற்றுள்ளோம்.

   கடைசிக் கட்ட ஓவர்களை சிறப்பாக வீச முடியவில்லை. அதனால் பல்வேறு உத்திகளைக் கையாள்வதோடு, பெüலர்களுக்கு உதவும் வகையில் சிறப்பான பீல்டிங்கையும் திட்டமிட வேண்டும். 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஒரு பகுதிநேர பந்து வீச்சாளருடன் களமிறங்குவதுதான் இப்போதைய திட்டம். ஆனால் மைதானத்தின் சூழலைப் பொறுத்து பகுதிநேர பந்து வீச்சாளருக்குப் பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்புள்ளது.

   மைதானம் காய்ந்த நிலையில் காணப்பட்டால் அங்கு 160 முதல் 180 ரன்கள் வரை எடுத்தால் அது நல்ல ஸ்கோராக இருக்கும். ஆனால் இலங்கை மைதானங்களில் 160 ரன்கள் எடுத்தாலே அது நல்ல ஸ்கோர்தான். இருப்பினும் நாம் மனதளவில் முன்கூட்டியே ஸ்கோரை நிர்ணயிக்க முடியாது. ஆட்டத்தின் நிலையைப் பொறுத்து ஒவ்வொரு 5 ஓவருக்கும் நம்முடைய இலக்கை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai