சுடச்சுட

  
  spt5

  கொழும்பு, செப்.19: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

  முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  இலங்கைத் தலைநகர் கொழும்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்டின் ஸ்டெம்பை தகர்த்தார் வாட்சன். இதனால் அயர்லாந்து ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்கெட்டை இழந்தது.

  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிர்லிங் 7 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 18 பந்துகளைச் சந்தித்த ஜாய்ஸ் 16 ரன்களிலும், வில்சன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த நியால் ஓ"பிரையனும், கெவின் ஓ"பிரையனும் 5-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர்.

  நியால் ஓ"பிரையன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கெவின் ஓ"பிரையன் 29 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. கியூசாக் 15, ஜோன்ஸ் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் ஷேன் வாட்சன் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  ஆஸ்திரேலியா வெற்றி: இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் வார்னர்-வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தது. 23 பந்துகளைச் சந்தித்த வார்னர் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார்.

  இதையடுத்து மைக் ஹசி களமிறங்கினார். அயர்லாந்து பெüலர்களை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிய வாட்சன் 28 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார். அவர் 51 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

  அதே ஓவரில் மைக் ஹசியும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேமரூன் ஒயிட்டும், கேப்டன் ஜார்ஜ் பெய்லியும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல, 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. அயர்லாந்து தரப்பில் டாக்ரெல், கெவின் ஓ"பிரையன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai