சுடச்சுட

  
  spt1

  கொழும்பு, செப்.19: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

  முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான், இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இந்திய அணியில் கம்பீரும், சேவாக்கும் தடுமாற்றுத்துடனேயே விளையாடினர்.

  இதனால் கம்பீர் 10 ரன்களிலும், சேவாக் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதையடுத்து விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் ஜோடி சேர்ந்தனர். யுவராஜ் சிங் சிக்ஸர் அடித்து தனது ஆட்டத்தைத் தொடங்கினார்.

  மறுமுனையில் விராட் கோலியும் வேகமாக விளையாட இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தது. 20 பந்துகளைச் சந்தித்த யுவராஜ் 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரெய்னா களம் புகுந்தார்.

  கரீம் வீசிய 13-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, 3-வது பந்தை தூக்கியடித்தார். ஆனால் எல்லையில் நின்ற சமியுல்லாவின் கைக்கு பந்து சென்றது. அவர் கேட்ச் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை கோட்டைவிட்டதோடு, சிக்ஸருக்கும் தட்டிவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற கோலி, 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

  இதையடுத்து கேப்டன் தோனி களம் புகுந்தார். தொடர்ந்து பவுண்டரிகளை விரட்டிய ரெய்னா, கடைசி ஓவரின் 2-வது பந்தில் முகமது நபி பந்துவீச்சில் போல்டு ஆனார். 33 பந்துகளைச் சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது இந்தியா.

  தோனி 9 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களும், ரோஹித் சர்மா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  ஆப்கானிஸ்தான் தரப்பில் ஷாபூர் ஜட்ரான் 2 விக்கெட்டுகளையும், தெüலத் ஜட்ரான், கரீம் சாதிக், முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  பீல்டிங் மோசம்: ஆப்கானிஸ்தான் வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்ததால் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், கோலி, ரெய்னா ஆகியோர் அவுட்டாவதிலிருந்து தப்பினர். ஒருவேளை அவர்களின் பீல்டிங் நன்றாக இருந்திருக்குமானால் இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியிருப்பார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai