சுடச்சுட

    

    புது தில்லி, செப்.19: ஸ்லோவேகியாவின் கோசிஸில் நடைபெற்று வரும் இளையோர் உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சந்திரிகா தரப்தார் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

    இதன்மூலம் இளையோர் உலக பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    மகளிர் 44 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் ஒரு வெண்கலம், மொத்த எடைப் பிரிவில் ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களை வென்றுள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 55 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 74 கிலோ என மொத்தம் 129 கிலோ எடையைத் தூக்கினார் சந்திரிகா.

    இதே பிரிவில் சீனாவின் மயோ ஜியன்மேய் ஸ்னாட்ச் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், மொத்த எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். மொத்தமாக அவர் 139 கிலோ எடையைத் தூக்கினார். ருமேனியாவின் மோனிகா சுனேட்டா 139 கிலோ எடையைத் தூக்கினாலும், அவரின் எடை சீனாவின் மயோவைவிட அதிகம் என்பதால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

    இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 2 வீரர்கள் உள்பட மொத்தம் 8 பேர் பங்கேற்

    றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai