சுடச்சுட

  
  spt6

  புது தில்லி, செப்.19: அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) ஒரு நபர் கட்டுப்பாட்டில் இல்லை, அது ஒரு ஜனநாயக அமைப்பு என்று அதன் செயற்குழு தெரிவித்துள்ளது.

  ஒலிம்பிக்கில் பயஸýடன் இணைந்து விளையாட மறுத்ததன் எதிரொலியாக பூபதி, போபண்ணா ஆகியோரை அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யமாட்டோம் என்று ஏஐடிஏ தெரிவித்தது.

  இதையடுத்து மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மகேஷ் பூபதி, டென்னிஸ் சங்கத்தின் அனைத்து முடிவுகளையும் அதன் தலைவர் அனில் கன்னாவே எடுக்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

  இந்த நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஏஐடிஏவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

  நாங்கள் ஒன்றும் அனில் கன்னாவின் கைப்பாவைகள் அல்ல. எல்லா விஷயங்கள் குறித்தும் விவாதிப்பதோடு, அர்ப்பணிப்போடு பணியாற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மகேஷ் பூபதியால் அவமானம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்.

  மகேஷ் பூபதி கூறியிருப்பதில் உண்மையில்லை. ஏஐடிஏ மிகச்சிறந்த நிர்வாக அமைப்பை உடையது.

  ஏஐடிஏவில் உள்ள 4 செயற்குழு இயக்குநர்களும் எல்லா வகையிலும் தகுதியானவர்கள். இங்குள்ள 6 கமிட்டிகளின் தலைவர்களும் கல்வி, அரசியல், இதழியல், நிர்வாகம் என அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள். மிகச்சிறந்த ஜனநாயக அமைப்புகளில் ஏஐடிஏவும் ஒன்று.

  2000 முதல் 2012-ம் ஆண்டு இதன் தலைவராக இருந்த யஷ்வந்த் சின்ஹா எம்.பி., முன்னாள் நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரும்கூட. டென்னிஸ் சங்கத்தின் ஆயுள் கால கெüரவ தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா மத்திய வெளியுறவு அமைச்சர் ஆவார். ஏஐடிஏவின் துணைத் தலைவர்கள் வெளிப்படையாகவும், ஜனநாயக அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

  பூபதி-போபண்ணாவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை சரியான முடிவே. அவர்கள் இருவருக்கும் 2 ஆண்டுகள் தடை விதிப்பது என்ற முடிவை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 பேர் கொண்ட செயற்குழுவே எடுத்தது. அவர்களுக்கு தடை விதிப்பதில் அனில் கன்னாவுக்கு விருப்பமில்லை.

  ஆனாலும் செயற்குழு ஒருமனதாக முடிவெடுத்ததாலேயே தடை விதிக்கப்பட்டது. இதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டதற்கு அனில் கன்னா பொறுப்பல்ல என்பது தெளிவாகிறது.

  செயற்குழுவினரும் அனில் கன்னாவின் கைப்பாவைகள் அல்ல என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  "பூபதி, போபண்ணா மேல்முறையீடு செய்யலாம்'

  மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் தங்களின் 2 ஆண்டுகால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று இந்திய டென்னிஸ் சங்க பொதுச் செயலர் பாரத் ஒஸô தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பது:

  அவர்கள் இருவரும் எங்களின் உதவியை நாடினால் அதை நாங்கள் மறுக்கமாட்டோம். அவர்கள் செயற்குழுவிடம் மேல்முறையீடு செய்தால், அதை நீதி நெறிக் குழுவிடம் அனுப்புவோம். நாங்கள் ஒருபோதும் அவர்களை துரோகிகள் என்று கூறியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai