சுடச்சுட

  
  spt2

  அம்பணத்தோட்டம், செப்.19: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை.

  இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட்டுகளையும், ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 17.3 ஓவர்களில் 100 ரன்களில் சுருண்டது.

  4-வது இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அம்பணத்தோட்டத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் முனவீரா-தில்ஷான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தது.

  முனவீரா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். 28 பந்துகளைச் சந்தித்த தில்ஷான் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் ஜெயவர்த்தனா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.  

  இதன்பிறகு சங்ககாராவும், ஜீவன் மெண்டிஸýம் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். சங்ககாரா 26 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் வீழ்ந்தார்.

  இறுதியில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. மெண்டிஸ் 30 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 43, பெரெரா 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 6 ஓவர்களில் மட்டும் இலங்கை 75 ரன்கள் சேர்த்தது.

  ஜிம்பாப்வே தோல்வி: பின்னர் பேட் செய்த ஜிம்பாப்வே, இலங்கையின் சுழற்பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. அதிகபட்சமாக மஸகட்ஸô 20, சிகும்பரா 19 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதனால் அந்த அணி 100 ரன்களில் சுருண்டது. இலங்கைத் தரப்பில் ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai