சுடச்சுட

  

  ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.40 கோடிக்கு சாய்னா ஒப்பந்தம்

  Published on : 26th September 2012 12:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt3

  புது தில்லி, செப்.19: ரித்தி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனத்துடன் ரூ. 40 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளார் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.

  இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக மற்ற விளையாட்டிலிருந்து அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது சாய்னாதான். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான சாய்னா, டெக்கான் குழுமத்துடன் செய்திருந்த 3 ஆண்டுகால விளம்பர ஒப்பந்தம் இந்த மாதத்தோடு முடிவடைகிறது. இதையடுத்து இப்போது ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் 3 ஆண்டுகாலம் சாய்னா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

  இதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சாய்னாவின் விளம்பர ஒப்பந்தம், ஸ்பான்சர்ஷிப், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வர்த்தக ரீதியாக சாய்னாவின் படத்தை பயன்படுத்துவது தொடர்பான உரிமை உள்ளிட்ட பணிகளை  ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும்.

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்கெனவே விளம்பர ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai