சுடச்சுட

  
  20spt2

  புது தில்லி, செப்.20: மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இன்னும் 2 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாடலாம் என்று மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் 3 இன்னிங்ஸ்களில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதையடுத்து அவர் ஓய்வுபெறலாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக லாரா மேலும் கூறியிருப்பது: இன்னும் 2 ஆண்டு கிரிக்கெட் சச்சினிடம் உள்ளது. அவர் இருபது ஓவர் போட்டியிலிருந்து விலகிவிட்டார் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியுமா என்பது சந்தேகமே.

  இருப்பினும் டெஸ்ட் போட்டியில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அவரால் விளையாட முடியும். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவிப்பதற்குகூட அவர் இலக்கு நிர்ணயித்திருக்கலாம்.

  கிரிக்கெட்டை அவர் மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கிரிக்கெட்டில் களமிறங்கியபோது அவருக்கு 15 வயதா அல்லது 16 வயதா என்று எனக்குத் தெரியாது. நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்போ, இரண்டு ஆண்டுகளுக்கு முன்போ அவர் அறிமுகமாகியிருக்கலாம்.

  நான் ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் சச்சின் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் 25 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அது சச்சினுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமையாகும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai