சுடச்சுட

  

  புது தில்லி, செப்.20: ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, அஜய் ஜெயராம் ஆகியோர் தோல்வி கண்டனர்.

  இதன்மூலம் இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

  இப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து 21-10, 12-21, 18-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் இயான் ஜூ பெயேவிடம் தோல்வி கண்டார்.

  இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-10 என்ற கணக்கில் சிந்து எளிதாக வென்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்ட இயான் ஜூ, அடுத்த செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  பின்னர் நடைபெற்ற 3-வது செட்டின் ஆரம்பத்தில் இயான் ஜூ முன்னிலை பெற்றாலும், பாதிக்குப் பிறகு சிந்து கடுமையாகப் போராடினார். இருப்பினும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

  ஜெயராம் தோல்வி: ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 16-21, 16-21 என்ற நேர் செட்களில் மலேசியாவின் வெய் ஃபெங் சாங்கிடம் தோல்வி கண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai