சுடச்சுட

  

  புது தில்லி, செப்.20: இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு (ஐஓஏ) தேர்தல் நடத்துவது தொடர்பான தேதியை வரும் 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐஓஏவை எச்சரித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி).

  ஐஓஏவின் முன்னாள் தலைவரான சுரேஷ் கல்மாடியின் விவகாரத்தால் குழப்பம் நிலவி வரும் நிலையில், ஐஓஏவுக்கு தேர்தல் நடைபெறும்போது அதை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை அனுப்புவோம் என்று ஐஓசி கூறியிருந்தது. அதற்குப் பதில் கடிதம் எழுதிய ஐஓஏ தலைவர் (பொறுப்பு) விஜய் குமார் மல்ஹோத்ரா, "தேர்தலைக் கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கூறியிருந்தார்.

  இதனால் கோபமடைந்த ஐஓசி, இது தொடர்பாக மல்ஹோத்ராவுக்கு கடந்த 18-ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில், "நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் உங்களாலும், உங்களுடைய ஒலிம்பிக் கமிட்டியாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமா?

  நாங்கள் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் தேர்தல் தொடர்பாக உரிய பதிலளிக்காவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐஓசி செயற்குழுவிடம் கோருவோம்' என்று குறிப்பிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai