சுடச்சுட

  
  spt3

  கொழும்பு, செப்.21: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் 117 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அடுத்த சற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்.

  இங்கிலாந்து வீரர் லுக் ரைட் 55 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 17.2 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

  இலங்கைத் தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற  ஆப்கானிஸ்தான் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் கீஸ்வெட்டர் ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே வெளியேறினார்.

  இதையடுத்து அலெக்ஸ் ஹேல்ஸýடன் இணைந்தார் லுக் ரைட். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. ஹேல்ஸ் 31 ரன்களில் ரன் அவுட்டானார்.

  இதையடுத்து இயோன் மோர்கன் களம்புகுந்தார். சமியுல்லா வீசிய 13-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதம் கண்டார் லுக் ரைட். 34 பந்துகளில் 2சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அவர் அரை சதமடித்தார்.

  இதனால் 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. முகமது நபி வீசிய 16-வது ஓவரில் ரைட் ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விளாசினார். இதனிடையே மோர்கன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.  ஒரு கட்டத்தில் 18 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரைட் 76 ரன்கள் எடுத்திருந்தார்.

  இஸத்துல்லா வீசிய 19-வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசிய ரைட், சதத்தை நெருங்கினார். கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தால் சதமடித்துவிடலாம் என்ற நிலையில், ரைட் 2 ரன்களே எடுத்தார். இதனால் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார் ரைட்.

  இங்கிலாந்து எடுத்த 196 ரன்கள்தான் இந்த உலகக் கோப்பையில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் தரப்பில் இஸத்துல்லா 3 ஓவர்களில் 56 ரன்களையும், முகமது நபி 4 ஓவர்களில் 46 ரன்களையும் வாரி வழங்கினர். பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான்  17.2 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  சூப்பர் 8-ல்  இந்தியா, இங்கிலாந்து: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் தோற்றதால் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றான "சூப்பர் -8' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

  இதனால் இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai