சுடச்சுட

  

  பெங்களூர், செப்.21: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 86.3 ஓவர்களில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  ராஜஸ்தான்-ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை போட்டி பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

  ராபின் பிஸ்ட் சதம்: இதையடுத்து பேட் செய்த ராஜஸ்தான் அணியில்  சக்சேனா ரன் ஏதுமின்றியும், கேப்டன் கனித்கர் 8 ரன்களிலும், லம்பா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  பின்னர் வந்த பரிதா 34, யாக்னிக் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

  ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராபின் பிஸ்ட் சதமடித்தார். இறுதியில் ராஜஸ்தான் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராபின் பிஸ்ட் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, பின்னி ஆகியோர் தலா விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  ரெஸ்ட் ஆஃப் இந்தியா-2/0: இதையடுத்து பேட் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 2 ரன்களுடனும், முரளி விஜய் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai