சுடச்சுட

  

  அம்பணத்தோட்டத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

  இவ்விரு அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி அடுத்த சுற்றான "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறிவிட்டதால் இந்த ஆட்டத்தில் வென்றாலும், தோற்றாலும் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று தாங்கள் இடம்பெற்றுள்ள "சி' பிரிவில் முதலிடத்தைப் பிடிக்க இவ்விரு அணிகளும் போராடும்.

  ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இலங்கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினாலும், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்கப் போராட வேண்டியிருக்கும். இலங்கை அணியில் முனவீராவுக்குப் பதிலாக சன்டிமால் இடம்பெறுவார் என்று தெரிகிறது.

  இதனால் தில்ஷானுடன் கேப்டன் ஜெயவர்த்தனா தொடக்க வீரராக களமிறங்குவார். சங்ககாரா, ஜீவன் மெண்டிஸ், பெரெரா உள்ளிட்டோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

  இலங்கையின் மிகப்பெரிய பலம் சுழற்பந்துவீச்சுதான். ஜிம்பாப்வேக்கு எதிராக அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட்டுகளையும், ஜீவன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சை சமாளிக்க தடுமாறும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இவர்கள் இருவரும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

  தென் ஆப்பிரிக்க அணியில் ரிச்சர்ட் லெவி, ஹசிம் ஆம்லா, டிவில்லியர்ஸ், காலிஸ், டுமினி, டூ பிளெஸ்ஸிஸ், அல்பி மோர்கல் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். பந்துவீச்சில் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், காலிஸ் ஆகியோரை நம்பியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai