சுடச்சுட

  

  சாம்பியன்ஸ் லீக்: டெல்லி அணியில் ஆரோனுக்குப் பதில் சால்வி

  Published on : 26th September 2012 12:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி, செப்.21: சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் போட்டியில் விளையாடவுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அவிஷ்கர் சால்வி சேர்க்கப்பட்டுள்ளார்.

  4-வது சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் போட்டி  அக்டோபர் 9 முதல் 28 வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் விளையாடுகிறது.

  இந்த அணியில் இடம்பெற்றிருந்த வருண் ஆரோன், அடி நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருப்பதால் அவர் சேர்க்கப்படவில்லை என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சால்வி, இந்திய அணிக்காக 2003-ம் ஆண்டு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதேபோல் 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  சாம்பியன்ஸ் லீக் போட்டியில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை சந்திக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai