சுடச்சுட

  

  புது தில்லி, செப்.21: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கேபிள் ஆபரேட்டர்கள், ஹோட்டல்கள், இணையதளங்கள் ஆகியவை உரிமம் பெறாமல் ஒளிபரப்ப நிரந்தரத் தடை விதித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.

  இலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேரடி ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

  தற்போது போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், உத்தேசமாக 34 கேபிள் ஆபரேட்டர்கள், ஹோட்டல்கள், இணையதளங்கள் ஆகியவை எங்களிடம் உரிமம் பெறாமல், போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

  எனவே உரிமம் பெறாமல் ஒளிபரப்பு செய்வதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் இ.எஸ்.பி.என். சாஃப்ட்வேர் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

  அதை விசாரித்த நீதிமன்றம், இ.எஸ்.பி.என். நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெறாமல் போட்டியை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

  இனி யாராவது உரிமம் பெறாமல் ஒளிபரப்பு செய்தால் நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாக இருக்கும். அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று இ.எஸ்.பி.என். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai