சுடச்சுட

  
  spt2

  லண்டன், செப்.21: அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாக நம்புகிறேன். அதனால் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.

  சமீபத்தில் ஓய்வுபெற்ற இங்கிலாந்து கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராûஸ கிண்டல் செய்து தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய விவகாரத்தில், பீட்டர்சனின் மன்னிப்பு கடிதத்தை ஸ்டிராஸ் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தான் மீண்டும் அணிக்குத் தேர்வு செய்யப்படுவோம் என்று காத்திருக்கிறார் பீட்டர்சன்.

  இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பீட்டர்சன் மேலும் கூறியிருப்பது: பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக நம்புகிறேன். அதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெறுவேன் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

  இதனிடையே பிபிசி ரேடியாவுக்கு ஸ்டிராஸ் அளித்துள்ள பேட்டியில், "நானும், பீட்டர்சனும் பேசினோம். அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்.

  சில விஷயங்களை வெளிப்படையாக பேசினோம். பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டன. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவரை சந்தித்துப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எஸ்.எம்.எஸ். விவகாரத்தால் எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை' என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai