சுடச்சுட

  
  spt3

  பெங்களூர், செப்.22:  இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்துள்ளது.

  இதன்மூலம் அந்த அணி ராஜஸ்தானைவிட 75 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 5 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

  பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப் போட்டியில் ராஜஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 86.3 ஓவர்களில் 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தது.

  2-வது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் முரளி விஜய்-ரஹானே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ரஹானே 81 ரன்களில் ஆட்டமிழந்தார். 81 ரன்கள் எடுத்ததன் மூலம் முதல்தர போட்டியில் 5000 ரன்களை எட்டினார் ரஹானே.

  இதையடுத்து புஜாரா களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய முரளி விஜய் முதல் தர போட்டியில் தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார். அந்த அணி 326 ரன்களை எட்டியபோது புஜாரா 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 151 ரன்களுடனும், பத்ரிநாத் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai