சுடச்சுட

  

  கெயில், சாமுவேல்ஸ் விளாசலில் 191 ரன்கள் குவித்தது மே.இ.தீவுகள்

  Published on : 26th September 2012 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  கொழும்பு, செப்.22:  இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது மேற்கிந்தியத் தீவுகள்.

  அந்த அணியின் கிறிஸ் கெயில் 33 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், சாமுவேல்ஸ் 32 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்தனர்.

  கெயில் விளாசல்: கொழும்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

  அந்த அணியில் டுவைன் ஸ்மித் 2 ரன்களில் ஆட்டமிழக்க, கிறிஸ் கெயிலுடன் இணைந்தார் சார்லஸ். ஸ்டார்க் வீசிய 4-வது ஓவரில் சார்லஸ் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விரட்டினார்.

  பட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரை எதிர்கொண்ட கிறிஸ் கெயில், 3 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விரட்ட, 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்களை எட்டியது மேற்கிந்தியத் தீவுகள். அடுத்த ஓவரில் சார்லஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாமுவேல்ஸ் களமிறங்கினார்.

  தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கெயில், கிளென் மாக்ஸ்வெல் வீசிய 8-வது ஓவரில் 2 சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசி 26 பந்துகளில் அரைசதம் கண்டார். வாட்சன் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கெயில். அவர் 54 ரன்கள் எடுத்தார்.

  சாமுவேல்ஸ் அதிரடி: இதையடுத்து டுவைன் பிராவோ களம் கண்டார். இதன்பிறகு சாமுவேல்ஸ் அதிரடியில் இறங்கினார். பிராட் ஹாக் வீசிய 14-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும், ஒரு சிக்ஸரையும் விளாசிய சாமுவேல்ஸ், வாட்சன் வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்த ஓவரில் அரைசதம் கண்ட சாமுவேல்ஸ், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 50 ரன்கள் எடுத்தார்.

  இதன்பிறகு வந்த வேகத்திலேயே பவுண்டரியை அடித்த போலார்ட், மேலும் ஒரு பவுண்டரியை விளாசி 10 ரன்களில் வீழ்ந்தார். 21 பந்துகளைச் சந்தித்த பிராவோ ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் டேரன் சமி 12 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வாட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai